இந்திரா- விமர்சனம்
வசந்த் ரவியின் வழக்கமான திரில்லர்களில் ஒன்றாக அமைந்துள்ளது இந்தப்படம்
சென்னை சிட்டியில் தொடர்ச்சியாக கொலைகள் செய்து வருகிறார் சுனில். பார்வை பறிபோன இன்ஸ்பெக்டர் வசந்த் ரவியின் மனைவியும் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைகளை சுனில் ஏன் செய்தார் என்ற விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளி வருகின்றன. அவை என்னென்ன என்பதே படத்தின் மீதிக்கதை
வசந்த் ரவி வழக்கம் போல் அவரது மீட்டரில் நடித்துள்ளார். ப்ளாஸ்பேக்கில் வரும் ஒரு இளைஞர் ஓரளவு ஸ்கோர் செய்கிறார். மேக்ரீன் வசந்த் ரவியின் காதல் மனைவியாக ஈர்க்கவே செய்கிறார். அனிகா ப்ளாஸ்பேக்கில் வந்து பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார். சுனில் சிறப்பாக நடித்துள்ளார். கல்யாண், ராஜ்குமார் இருவரும் ஒகே ரகம்
ஒளிப்பதிவாளர் நேர்த்தியான ஷாட்கள் மூலம் விஷுவல்ஸை அழகாக்கியுள்ளார். அஜ்மல் தாசீன் பின்னணி இசையை ஓகே வாக தந்துள்ளார். பாடல்கள் மனதில் பதியவில்லை
படத்தின் புட்டேஜ் இரண்டு மணிநேரம் என்றாலும் படம் நீளமாக இருப்பதாக நமக்கு Feel ஆகிக்கொண்டே இருக்கிறது. திரைக்கதையில் இதுவொரு பெரிய மைனஸ். யாருடைய எமோஷ்னலும் முழுமையாக கூடிவரவில்லை. சபரிஷ் நந்தா இன்னும் அதிக மெனக்கெடலோடு எழுதி இயக்கியிருந்தால் நல்ல திரில்லர் படம் கிடைத்திருக்கும்! பச்
2.5/5