பதான்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தேசத்தை நிம்மதியாக வாழவைக்க படத்தில் பெரும் ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளார் தீபிகா படுகோன்

So தீபிகாபடுகோனுக்காக போராட வேண்டிய சமூகம் அவருக்கு எதிராக போராடியதை வன்மையாக கண்டித்து விமர்சனத்திற்குள் வருவோம்

ஜோல்ஜராக பணியாற்றி வீரத்தழும்புகளோடு இருக்கும் பல வீரர்களை ஒன்றிணைத்து தேசத்திற்காக பல ஆபரேஷன்களை செய்ய முயற்சிக்கிறார் ஹீரோ ஷாருக்கான். அதற்கு மேல் அதிகாரிகள் ஒப்புதல் கொடுக்க, அந்த நேரத்தில் நாட்டின் மிகச்சிறந்த சயிண்டிஸ்ட் இருவர்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்திய வில்லனுக்கு என்ன தேவை? நாட்டை அச்சுறுத்தப் போகும் அந்த வில்லனின் கதையை எப்படி ஹீரோ முடிக்கிறார் என்பதே பதானின் கதை

ஷாருக்கான் ஒவ்வொரு ப்ரேமிலும் செம்ம ஷார்ப்பாக இருக்கிறார். காதல், சோகம், இழப்பு, தவிப்பு என எல்லா ஏரியாவிலும் அடித்து ஆடியிருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் ஹாலிவுட் ஹீரோக்களுக்கு சவால் விடுகிறார். ஷாருக்கானுக்கு இணையான கேரக்டர் தீபிகாபடுகோனேவிற்கு. க்ளாமர்+ ஆக்‌ஷன் இரண்டிலும் எனர்ஜி ஏற்றுகிறார். வில்லனாக வரும் ஜான் ஆபிரகாம் மிரட்டல் ரகம். அவர் ஹீரோவை டீல் செய்யும் விதமே அதகளம்

படத்தின் பரபரப்பை கூட்டிச் சென்றதில் பின்னணி இசையின் பங்கு மிக முக்கியம். பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவாளர் தீபிகா படுகோனை காவி உடையில் மட்டுமல்ல எல்லா உடையிலுமே அழகாக காண்பித்திருக்கிறார். மற்றபடி சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளரும் ஸ்டண்ட் மாஸ்டருக்கு இணையாக உழைத்துள்ளார். கேமியோ ரோலில் வரும் சல்மான் கானின் பைட் என்ட்ரி படத்திற்கு கூடுதல் பூஸ்டர். படத்தில் நிறைய CG காட்சிகள் இருக்கிறது. அவை ரசிக்கும் படியே அமைந்தது சிறப்பு

தேசப்பற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. ஆனால் ஆடியன்ஸை மனதில் வைத்து திரைக்கதை அமைத்துள்ளார்கள். இரண்டரை மணிநேரம் போனதே தெரியாமல் படம் பறக்கிறது. சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்ற மைண்ட் செட்டில் இந்தப்படத்தைப் பார்த்தால் குறைகள் பெரிதாக கண்களுக்குத் தெரியாது.. பதான் கொண்டாட்ட ரகம்

3.5/5