‘ஜெயம்’ ரவி, நயன்தாரா நடிக்கும் ‘இறைவன்’!

Get real time updates directly on you device, subscribe now.

பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் ஆகியோர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்கு படங்களை உருவாக்கியுள்ளனர். நம்பிக்கைகுரிய நிறைய படங்கள் தயாரித்து இருந்தாலும் இந்த வருடம் 2023-லும் வித்தியாசமான கதைக்களங்களை கைவசம் வைத்திருக்கின்றனர். அதில், I. அஹமது இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி- நயன்தாரா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் ‘இறைவன்’ திரைப்படமும் ஒன்று. இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வையை ஹேண்ட்ஸம் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

Related Posts
1 of 12

படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசியதாவது, “‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘இறைவன்’ படம் உருவான மொத்த புராசஸும் சுவாரஸ்யமானது. ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா போன்ற நட்சத்திரங்களுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் அஹமத் உருவாக்கி இருக்கிறார். அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்தது தயாரிப்பாளராக பேஷன் ஸ்டுடியோஸிற்கு மகிழ்ச்சியான விஷயம். எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி சார் அவர்களுக்கு நன்றி. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதிகளை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் வில்லன் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி, பொற்கொடி இன்னும் பல முக்கிய கதாபாத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.