இரவின் நிழல்- விமர்சனம்
நான் லீனியர் முறையில் மேக்கிங் போய் சிங்கிள் ஷாட் படம் என்பது உலகிலே இதுதான் என்று இரவின் நிழல் படத்தை எல்லோரும் சொல்கிறார்கள். தமிழனாக ஒவ்வொருவரும் பெருமைகொள்ள வேண்டிய விசயமிது
படத்தில் பார்த்திபனின் வாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இரவின் நிழல் படத்தின் கதை. கதைக்காக பெரிதாக மெனக்கெடாத பார்த்திபன் மேக்கிங்கிற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார். சபாஷ்..பட் கதையும் முக்கியம் பாஸ்
நடிகராக பார்த்திபனுக்கு இதுவும் ஒரு நல்லபடமே. நிறைய இடங்களில் கவர்கிறார். வரலெட்சுமி இரண்டே காட்சிகள் தான் வருகிறார். பெரிய அழுத்தம் ஒன்றுமில்லை..ரோபோ சங்கர் பெரிதாக சோபிக்கவில்லை. ஏனைய நடிகர்கள் அனைவருமே கொடுத்த வேலையைச் செய்துள்ளார்கள். குறிப்பிட்டுச் சொல்லும் படி எந்த கேரக்டரும் ஜொலிக்கவில்லை
இந்தப்படத்தை காத்து நிற்கும் ரட்சகன் ஏ.ஆர் ரகுமான் தான். பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் படத்தின் ஆன்மாவை இறுகப்பிடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உழைப்பு இரவின் நிழல் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறது. ஒரே ஷாட் படத்தில் கூட எத்தனையோ லைட் வேரியஷன். மிராக்கிள்
படத்தின் கதையம்சம் தான் மிகவும் பிற்போக்குத் தனமாக இருக்கிறது.. தவறான சூழலில் வளரும் சிறுவன், அதனால் தவறு செய்கிறான், ஆண்களுக்கு துரோகம் மட்டுமே செய்யும் பெண்கள் என பார்த்திபன் டெம்ப்ளேட் பல இடங்களில் டல்லடிக்கிறது. வசனங்களிலும் பெரிய அழுத்தமில்லை. 90 நிமிட படத்தில் பெரிய என்கேஜிங் எதுவுமில்லை. கதையில் போதிய ஆழம் இருந்திருந்தால் நிச்சயமாக படம் வணிக ரீதியாகவும் பெரு வெற்றியை அடையும்
. இருந்தாலும் உலகசினிமா அவையில் தமிழ்சினிமாவைச் சேர்த்திருக்கும் பார்த்திபனை கொண்டாடியே தீர வேண்டும்!
3.5/5