ஜோஷ்வா- விமர்சனம்

அடிமட்ட லெவலில் இல்லாமல் உயர்மட்ட லெவலில் ஒரு கில்லர் + லவ்வர் படம் எடுத்துள்ளார் கெளதம் வாசுதேவ்மெனன்
ஹீரோயினுக்கு சுற்றிலும் நிறைய ஆப்புகள் காத்திருக்க, அவரை தன் இமைபோல காக்க முயல்கிறார் ஹீரோ வருண். ஹீரோயினுக்கு வரும் இன்னல்களுக்கான ரீசன் என்ன? ஹீரோயினை காப்பாற்ற ஹீரோ எடுக்கும் ஆக்ஷன் முயற்சிகள் என்ன? என்பதாக திரைக்கதை விரிகிறது
ஹீரோ வருண் சண்டை போடும் நேரம்போக மீதிக் கொஞ்சநேரம் நடிக்க முயற்சித்துள்ளார். அடுத்தடுத்த முயற்சிகளில் முன்னேற்றம் அடையட்டும். ஹீரோயின் அழகாக இருக்கிறார். சிறப்பாக நடிக்கிறார். டிடி உள்பட சப்போர்டிங் கேரக்டர்களில் கிருஷ்ணா மட்டும் கவனிக்க வைக்கிறார்..வில்லன்ஸ் ஓகே
ஒரு ஆக்சன் படத்திற்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம் என உணர்ந்து உழைத்துள்ளார் கேமராமேன் கதிர். கார்த்திக் பின்னணி இசையில் தன்னால் முடிந்த எனர்ஜியை கொடுத்துள்ளார். நான்காண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்பதால் நிறைய இடங்கள் அவுட்டேடட் ஆக இருக்கிறது
கதை எழுதும் போதே லாஜிக்கை தூக்கி தூர எறிந்துவிட்டார் போல கெளதம். படம் நெடுக காதில் பூ சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். விறுவிறுப்பை ஏற்படுத்தக் கூடிய வெளி இருந்தும் இந்த ஜோஷ்வா வழி தவறிப்போவதால் நமக்கு ஏகத்துக்கும் டயர்ட் ஆகிவிடுகிறது
2.25/5