எல்லோரையும் ஓட்டுப் போட சொன்னேன்; என்னால போட முடியல! : மன்னிப்பு கேட்டார் சூர்யா
நாளை நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எல்லோரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்காக சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பொதுமக்களுக்கு ஓட்டு போடுவதன் அவசியத்தை தேர்தல் ஆணையம் தயாரித்திருந்த வீடியோ மூலமாக சொல்லி வந்தனர்.
இந்த நிலையில் மக்கள் எல்லோரையும் தவறாமல் ஓட்டுப் போடச் சொன்ன சூர்யா, நாளைய தினம் ஓட்டு போடாமல் வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டார் என்கிற தகவல் பரவியது.
அது உண்மை தான் என்று சூர்யா தரப்பில் இன்று உறுதிப்படுத்தப்பட்ட அதே நேரத்தில், ஓட்டு போட முடியாமல் போனதற்கு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் சூர்யா.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ!