என் பெயரில் அறிக்கை விட்டது அநாகரீகமான செயல்! : கமல் காட்டம்
கெளதமி கொடுத்த நீண்ட உரை விளக்கத்துக்கு இன்று கமல் பெயரில் ஒரு விளக்கக் கடிதம் சமூகவலைத்தளங்களில் பரவியது.
அவரது மக்கள் தொடர்பாளரே அந்த விளக்கத்தை பகிர்ந்ததால் அது கமலின் விளக்கம் தான் போல என்று நினைத்து மீடியாக்களும் வெளியிட்டன.
இதற்கிடையே இன்று என் பெயரில் வந்த அறிக்கை நான் விட்ட அறிக்கையல்ல என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
”இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை. என்று சுருக்கமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்” கமல்.