மிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

தேசிய விருது பெற்ற நாயகி நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியா நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.மும்பை, 24 October, 2020: கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியாவின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. புதியவரான ஒய். நரேந்திரநாத் இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.

மிஸ் இந்தியா திரைப்படமானது சம்யுக்தா மானசாவின் (கீர்த்தி சுரேஷ்) பயணத்தை பற்றி பேசுகிறது. ஒரு உணர்ச்சிமிகு இளம் பெண்ணான அவர் தனது தாத்தாவின் கனவையும் தனது பால்யகால லட்சியத்தையும் நிறைவேற்ற முயல்கிறார். தன் வாழ்வில் புதிய வழியை உருவாக்கும் நோக்கில் அமெரிக்கா சென்று வெற்றிகரமான தேயிலை வியாபாரம் ஒன்றை நிறுவுகிறார். இந்த பயணத்தில் பிரபலமான காபி நிறுவனங்கள், துரோகங்கள், போட்டியாளர்கள், சொந்த குடும்பத்திலிருந்து எழும் எதிர்ப்புகள் ஆகிய அனைத்தையும் நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்.

மிஸ் இந்தியா படத்தின் மூலம், ஒரு தெரியாத நாட்டில் இருக்கும் தன்னைத் தானே செதுக்கிய ஒரு பெண்ணின் ஊக்கமிகு பயணத்துக்கு நம் அனைவரையும் கீர்த்தி சுரேஷ் அழைத்துச் செல்கிறார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகிறது.இப்படத்தை பற்றி கீர்த்தி கூறும்போது, ‘தனது கனவுகளை அடைவதைத் தடுக்க எதையும் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சம்யுக்தாவின் அழகாக வடிவமைக்கப்பட்ட கதையே மிஸ் இந்தியா. இப்படம் உலகளாவிய ரசிகர்களுக்காக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, ஏனெனில் பல இளம்பெண்கள் தாங்கள் பார்க்கும் மொழியை பொருட்படுத்தாமல் அவர்களின் கனவுகளை அடைய இப்படம் ஊக்கப்படுத்தும் என்று நான் உணர்கிறேன்.’ என்றார்.

இப்படத்தில் ஜகபதி பாபு, நாடியா மோயுடு, ராஜேந்திர பிரசாத், நவீன் சந்திரா, விகே நரேஷ், பூஜிதா பொன்னடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.தயாரிப்பாளர்: மகேஷ் எஸ் கொனேரு இயக்குநர் : ஒய். நரேந்திரநாத் (அறிமுகம்) கதை: தருண் குமார் & ஒய். நரேந்திரநாத் திரைக்கதை: ஒய். நரேந்திரநாத் இசை: எஸ். தமன்

நெட்ஃப்ளிக்ஸ் பற்றி: 190க்கும் மேற்பட்ட நாடுகளில் 195 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாக நெட்ஃப்ளிக்ஸ் உள்ளது. இது பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களை கொண்டுள்ளது. இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்த திரையிலும் உறுப்பினர்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்தும், தாங்கள் விரும்பியவற்றை பார்க்கலாம். உறுப்பினர்கள் எந்த வித விளம்பர இடைவேளையுமின்றி பார்க்கலாம், நிறுத்தலாம் மீண்டும் பார்க்கலாம்.