நாலு தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத ‘கிருமி’
‘காக்கா முட்டை’ படத்தின் எளிமையான வெற்றி அப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் கதை எழுதியிருக்கும் ‘கிருமி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக கிளறி விட்டிருக்கிறது.
”இந்தப் படத்தை நாலு தடவை பார்த்து விட்டேன், நாலு தடவை பார்த்த பிறகும் கூட அதன் பாதிப்பு அடுத்த இரண்டு நாட்களுக்கு இருந்தது. கண்டிப்பாக இந்தப்படம் ஒரு சிறந்த வெற்றிப் படமாக அமையும்” என்றார் படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன்.
இயக்குனர் அனுசரண் பேசும்போது ”கிருமி’ திரைப்படம் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அந்த திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் முதல் தமிழ் படம் இது தான் என்றார். எல்லாம் உறுதியான பின்பு அது எந்த திரைப்பட விழா என்பதை நான் வருகிற 17 ஆம் அறிவிக்கிறேன் என்றார்.
மேலும் எனக்கு நாயகன் கதிரை வைத்து என்னுடைய முதல் படத்தை இயக்க ஆசையில்லை, என்னுடைய பெற்றோர்கள் வார்த்தைக்காக தான் அவரை வைத்து படம் இயக்கினேன் என்றார்.
பின்னர் பேசிய நாயகி ரேஷ்மி மேனன் ‘இந்த படத்தின் டைட்டிலைக் கேட்டதும் நான் ‘ஷாக்’ ஆகி விட்டேன். இந்த படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்க முடியுமா என்ற யோசனை என்னுள் இருந்து கொண்டே இருந்தது.
இப்போது படம் வெளியாக உள்ளது. வட சென்னை பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் என்னை ‘இட்லி’ என்றே அழைப்பார்கள் என்றார். இட்லி வாங்க, இட்லி ஷாட் ரெடின்னுத்தான் கூப்பிடுவாங்க… என்றார்.
அப்போ பாபி சிம்ஹாவுக்கு பிடிச்ச காலை உணவு ‘இட்லி’ன்னு சொல்லுங்க…