லாக்டவுன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா கால லாக்டவுனை வாழ்வில் மறக்க முடியுமா? அந்தச் சமயத்தில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. இந்தப்படத்தில் நாயகி அனுபமா பரமேஸ்வரனுக்கு மிக முக்கியமான பிரச்சனை

அதாகப்பட்டது அனுபமா பரமேஸ்வரன் ஒரு வேலையில்லா பட்டதாரி. வேலை வேண்டி ஆபிஸ் ஆபிஸா ஏறி இறங்குகிறார். ஒரு நல் வாய்ப்பில் வேலைக்கான சிக்னல் அவருக்குக் கிடைக்கிறது. அந்தச் சிக்னலை உறுதிப்படுத்த அவர் ஒரு பார்ட்டிக்குச் செல்கிறார். அந்தப் பார்ட்டி முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து படத்தை ஓப்பன் செய்கிறார்கள். லாக்டவுனுக்கான காலம் நெருங்குகிறது. ஷாக்கிங் செய்தியாக அனுபமா பரமேஸ்வரன் கர்ப்பமாக இருக்கிறார். இது அவருக்குத் தெரியாது என்பது கூடுதல் ட்விஸ்ட். இந்த ட்விஸ்டின் விடை என்ன என்பதே திரைக்கதை

அனுபமா பரமேஸ்வரன் படத்தை தனியொருத்தியாக தாங்கியிருக்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் நடிப்பு விருதுகளுக்கு இட்டுச் செல்லும்படி இருக்கிறது. சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட் என பலரும் அசத்தலாக நடித்துள்ளனர்

ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசை அருமை. பாடல்கள் ஒகே ரகம். K.A. சக்திவேல் தேர்ந்த ஒளிப்பதிவைச் செய்துள்ளார். நல்ல நல்ல ஷாட்களை நோட் செய்ய முடிந்தது

பெண்கள் ஆண்கள் உலகத்தில் சஞ்சரிக்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இயக்குநர் வலியுறித்துள்ளார். இருப்பினும் குட்டியாக பெண்களை பயம் காட்டுவது போலுமுள்ளது. கூடவே ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் படத்தில். கூடுமானவரை படத்தை பரபரப்பாக நகர்த்தியது நல்ல மூவ். மிக்ஸிங் ரிவ்யூ கேட்டகிரி தான் என்றாலும் முதலுக்கு மோசம் செய்யாது இந்த லாக்டவுன்
2.75/5