லோகா சாப்டர்-1 சந்திரா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மலையாள திரையுலகில் மற்றொரு தரமான சம்பவம்

நாயகி கல்யாணிக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கிறது. அந்தப்பவருக்குப் பின்னால் ஒரு ஆன்மிக காரணமும், அந்தப்பவரை தாங்கிக்கொள்வதற்கு ஒரு சயிண்டிபிக் காரணமும் இருக்கிறது. சூப்பர் பவர் கொண்ட கல்யாணியின் இலக்கு என்ன? கல்யாணியை கரம் பிடிக்க நினைக்கும் நஸ்லினின் முடிவு என்ன? கல்யாணிக்கு வந்த இந்தப் பவருக்குப் பின்னாலுள்ள கதை என்ன? இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறது படம்

விறுவிறு ஆக்சன் காட்சிகளில் பழைய விஜயசாந்தியை நினைவூட்டுகிறார் கல்யாணி. எமோஷ்னல் காட்சிகளிலும் அதிரிபுதிரி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சாண்டி மாஸ்டர் இப்படத்தில் தான் பெரிய ரோலை நோக்கி நகர்ந்துள்ளார். இனி மலையாள இன்டஸ்ட்ரி அவரை விடாது. நஸ்லின் கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். கேமியோ ரோலில் வந்து செகண்ட் பார்ட்-க்கு லீட் தருகிறார்கள் டொவினோ தாமஸும், துல்கர் சல்மானும்

ஜாக்ஸ் பிஜாயின் இசையில் படத்தின் ஆன்மா இருக்கிறது. சிறு வயது கல்யாணிக்குள் யட்சி இறங்கும் போது கொடுக்கப்பட்ட பின்னணி இசை அட்டகாசம். ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி மிகவும் அற்புதமாக உழைத்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா சுற்றிச் சுழன்றுள்ளது. கலை இயக்கம், கலரிங், GC, எடிட்டிங் உள்ளிட்ட எல்லா தொழில்நுட்ப அம்சங்களும் படத்திற்கு வலு சேர்த்துள்ளன.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு மன்னன் அநீதி செய்கிறார். அந்த அநீதியின் அனல் தாங்காமல் ஒரு ஏழைத்தாயின் மகள் உடம்பில் யட்சி இறங்குகிறாள். அவள் அநீதிக்கு எதிரானவள் என ரைட்டிங்கிலே இயக்குநர் டொமினிக் அருண் படத்தை ஸ்ட்ராங்காக்கியுள்ளார். மேக்கிங்கும் ஆகத்தரம். பின்பாதியில் சற்றுப் பிசிறு தட்டினாலும் க்ளைமாக்ஸில் தட்டித் தூக்கிவிடுகிறார்கள் சேட்டன்கள்

லோகா- ஆகா
3.5/5