‘மர்தானி’ மூன்றாம் பாகத்திற்கான காணொளி வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட போலீஸ் கதைக்களத்தைக் கொண்டு வெளியான, படவரிசையில் முதல் பாகமான ‘மர்தானி’யின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, அதன் அடுத்த பாகத்தின் வெளியீடானது YRF-ஆல் கிண்டலாக பகிரப்பட்டுள்ளது.

கொண்டாட்டத்தின் காணொளியை இங்கே காணலாம் :

‘மர்தானி’ திரைப்படத்தின் முதல் பாகம் 2014-லும், அதன் தொடர்ச்சியாக கதை மெருகூட்டலுடன் இரண்டாவது பாகம் 2019-லும் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் தனி ரசிகர் பட்டாளத்தை கொணடுள்ளன.

உக்கிரமான மற்றும் துணிச்சலான, நியாயத்தின் பக்கம் நிற்கும் ஷிவானி சிவாஜி ராய் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் ‘மர்தானி’ படவரிசையின் அடுத்த பாகத்தில் நடித்துள்ளார்.

மர்தானி பாலின-விதிமுறைகளைத் தகர்த்து, ஆண் ஆதிக்கம் மிகுந்த ஒரு பதவியில் ஒரு பெண் எவ்வாறு சிறந்து விளங்க முடியும் என்பதைக் காட்டும் விதமாக, இந்த ‘மர்தானி’ மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது.