மார்க்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

கிச்சா சுதீப்பின் மார்க் பாஸா? பெயிலா?

நாலு வரிக்குள் சொல்லி முடிக்க முடியாத அளவிற்கு கதை அம்புட்டு பெருசு. கிச்சா சுதீப் ஒரு சஸ்பெண்ட் ஆன போலீஸ். ஆனாலும் அவர் சும்மா இருக்க மாட்டார் அல்லவா? அப்படி ஒரு போதை மருந்துக் கடத்தல் கும்பலை பிடிப்பதன் மூலமாக என்ட்ரி ஆகிறார். வில்லன் டீம்ஸ் பல ரகங்களில் பிரிந்து கிடக்க, 19 குழந்தைகள் கடத்தப்படுகிறது. மற்றொரு புறம் முதல்வரைக் கொன்று விட்டு, முதல்வரின் மகன் பதவிக்கு வர துடிக்கிறார். இப்படிச் சுற்றி நிற்கும் எல்லா வில்லன்களையும் சுதீப் எப்படிப் போட்டுப் பொளக்கிறார் என்பதே படத்தின் கதை

சுதீப்பை நடித்திருக்கிறார் என்பதை விட அடித்திருக்கிறார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். யெஸ் சீனுக்குச் சீன் போட்டுப் பொளந்துள்ளார். குரு சோமசுந்தரம், விக்ராந்த், யோகிபாபு, நவீன் சந்திரா ஆகியோரெல்லாம் சுதீப்பின் முன்னால் ஸ்விப் செய்யப்பட்டு விட்டனர் பாவம்

அஜனீஷ் லோக்நாத் இசை எனும் பெயரில் ஒரு வதையொலியை செய்திருக்கிறார். படம் முடிந்தபின்பும் காது கொய்ன் என்கிறது. இரு பாடல்கள் மட்டும் ஒகே. வரைகலை எனப்படும் CG துணையோடு பல பிரம்மாண்ட காட்சிகளை எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா. கிரேட் வொர்க் அது

இயக்குநர் விஜய் கார்த்திகேயா கான்பிடன்ட் இல்லாமல் இப்படத்தை அணுகிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் படத்திற்குள் நிறைய குழப்பங்கள். எல்லாவற்றையும் ஒரே படத்திற்குள் திணித்திருக்கிறார். அதனால் எந்தக் காட்சிகளிலும் கேரக்டர்களிலும் முழுமை இல்லை. வெறும் ஆக்சனை மட்டுமே நம்பி பாஸாக முயற்சித்துள்ளார். அம்முயற்சி ஓரளவு ஒகே என்பது மட்டுமே ஆறுதல். மற்றபடி மார்க் நமக்கு ஷாக்
2.25/5