மெய்யழகன்- விமர்சனம்

அன்பும் மன்னிப்பும் தான் ஆன்ம பலம் என்கிறது மெய்யழகன்
பூர்வீகத்தோடு ஒட்டு உறவில்லாமல் இருக்கும் அரவிந்தசாமி, ஒரு திருமணத்திற்காக தன் பூர்வீக ஊரான தஞ்சாவூருக்குச் செல்கிறார். அங்கு கார்த்தி அரவிந்த சாமியை வரவேற்கிறார். இருவருக்கும் இடையே ஒரு இரவு கடக்கிறது. அந்த இரவில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே மெய்யழகனின் திரைக்கதை
மிகச்சிறப்பான நடிப்பால் ஸ்கோர் மேல் ஸ்கோர் சேர்க்கிறார் கார்த்தி. ‘அத்தான் அத்தான்’ என்று அவர் அரவிந்தசாமியை சுற்றிச்சுற்றி வரும் போது நிறைய வெள்ளந்தி மனிதர்கள் நம் கண்முன் வருகிறார்கள். நேர்த்தியான நடிப்பால் அரவிந்தசாமியும் தன் பங்கையும் நிறைத்துள்ளார். ராஜ்கிரண், இளவரசு, ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் என திரைக்குள் சிலர் வந்தாலும், முதன்மை நாயகர்களான இருவரும் தான் அசத்துகிறார்கள்
படத்தின் இன்னொரு நாயகனாக கேமரா இருக்கிறது. வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ப்ரேமிங்கும் அசத்தல் ரகம். பின்னணி இசை அழகைக் கதையை நகர்த்திச் செல்கிறது
சமூக நல்லிணக்கம், வன்முறையற்ற வாழ்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பிறழாத அன்பு என படம் வசனங்களின் வழியே நல்ல நல்ல விசயங்களைப் பதிக்கிறது. ஆனால் அதற்கென்று ஒரு அளவு வேண்டாமா? இந்தப் படத்தின் நீளம் மூன்று மணிநேரம் என்பது மிகமிக அதிகம். எவ்வித யோசனையும் அற்று அரைமணி நேரத்தை வெட்டி எறியலாம்
நல்ல களம் தான். நீண்ட நேரம் நிற்கத்தான் முடியவில்லை
-3/5