கைதி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஆயுள் தண்டனை கைதியான கார்த்தி வெளிவந்து மகளைக் காண செல்லும் போது போதைக் கும்பலுக்கும் போலிஸுக்கும் நடக்கும் பிரச்சனையில் போலிஸுக்கு உதவ வேண்டிய சூழலில் மாட்டுகிறார். விடிவதற்குள் மகளை காண வேண்டும் என்ற அவரது ஆசை எப்படி நிறைவேறியது என்பதே கைதியின் கதை.

கைதியை மிக அழகாக கைப்பிடித்து நமக்கு அடையாளப்படுத்துகிறது லோகேஷ் கனகராஜின் ஸ்கிரீன் ப்ளே. கார்த்தியின் உடல்மொழியில் இருந்து அவரது பார்வை வரைக்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக டிசைன் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தில் யாருமே நடித்ததிற்கான சாயல் தெரியாமல் கதை நடக்கும் சூழலுக்குள் முங்கியவர்களாகத் தான் தெரிகிறார்கள்.

Related Posts
1 of 5

கார்த்தி நன்றாக நடிக்கிறார் என்று சொல்லி விளம்பரப் படுத்தும் இடத்தில் அவர் இல்லை. தான் ஏற்கும் கேரக்டருக்கு எல்லா வகையிலும் நியாயம் சேர்ப்பவர் அவர். அதில் கைதியும் தப்பவில்லை. திருநெல்வேலியில் இருந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கி வந்து ஸ்டேசனில் இருக்கும் காவலதிகாரியாக சார்ஜ் நடித்திருக்கிறார். மனிதருக்குள் இப்படியொரு நடிகரா என வியக்க வைத்துள்ளார். மேலும் நரேன் விஜய்டிவி தீனா இருவரும் படத்தின் மிக முக்கிய ஆளுமைகள். அசத்தி இருக்கிறார்கள். இரவில் நடக்கும் கதை என்பதால் அந்தக்காட்டோரப் பயணத்தில் தென்படும் விஷுவல்ஸ் எல்லாமே அல்டிமேட் ரகம். ஸ்கிரிப்பான எடிட்டிங், மாஸான ஸ்டண்ட் கொரியோகிராபி எல்லாம் படத்தின் அசுரபலம்.

பலம் வாய்ந்த ஸ்கிரீன் ப்ளேவை பலவீனப்படுத்தும் லாஜிக் ஓட்டைகளும் படம் பார்க்கும் போது நம்மைப் படுத்துகிறது. கமிஷ்னர் ஆபிஸில் எல்லா போலிஸும் ஓடி விடுவார்கள் என்பதும் லாரிக்குள்ளே இருக்கும் சகுனியைப் பற்றி கார்த்தி& நரேனுக்கு எதுவுமே தெரியாமல் இருப்பது என்பதும் கொலக்குத்து லாஜிக்.

சாம்.சி எஸ் பின்னணி இசை படத்தின் ஆகப்பெரும் ஆன்மா. வச்சி செய்திருக்கிறார். சின்னச்சின்ன தொய்வு இருந்தாலும் நம்மை ஒரு வித்தியாச அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறான் இந்தக்கைதி