இன்னும் தியேட்டர்களின் எண்ணிக்கை கூடும்..!!! : எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘மிருதன்’

Get real time updates directly on you device, subscribe now.

miruthan1

ந்த சிந்தனையே இந்திய சினிமாவுக்கு புதுசு தான். ஹிந்தி உட்பட எந்த மொழியிலும் ‘ZOMBIE’ ஜானர் படங்கள் வந்ததில்லை. பொதுவாக ஹாலிவுட்டில் பாப்புலரான அந்த ஜானரை முதல்முறையாக இந்தியாவிலேயே தமிழில் அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன்.

சிபிராஜூக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிப்படமாக அமைந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் இயக்குநர் தான் இவர்.

”இந்த ஜானரே ரசிகர்களுக்கு ரொம்ப புதுசா இருக்கும். மிருகத்தில் பாதி வார்த்தையும், மனிதனில் பாதி வார்த்தையும் தான் ‘மிருதன்’ என்ற டைட்டிலோட அர்த்தம்.

இந்த டைட்டிலை பாடலாசிரியர் மதன் கார்க்கி சொன்னபோது டைட்டிலும் தமிழில் இருந்தது. அது கதைக்கும் பொருத்தமாக இருந்தது” என்றார் சக்தி செளந்தர் ராஜன்.

படத்தில் ட்ராபிக் கான்ஸ்டபிளாக வருகிறாராம். அவருக்கு ஜோடி யாக வரும் லட்சுமிமேனன் ஒரு டாக்டராம். இருவருக்கும் எப்படி லவ் ஸ்டார்ட் ஆகிறது? என்பதே சுவாரஷ்யம். இந்த படத்துல நான் உட்பட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் எல்லோருமே அநியாய உழைப்பை போட்டிருக்கோம். ஒவ்வொரு நாளும் மேக்கப் போடுறதுக்கே அரை நாள் ஆயிடும். அப்படித்தான் சுமார் 400 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் மேக்கப் போட வேண்டியிருந்தது.

Related Posts
1 of 15

அதுக்காக பணத்தை செலவு பண்ணி வெளிநாட்ல இருந்தெல்லாம் மேக்கப் மேன்களை கூப்பிடவில்லை. நம்ம ஊர்லேயே திறமையான 40 மேக்கப்மேன்களை வெச்சு மேக்கப் போட்டுக்கிட்டோம். அந்தளவுக்கு படத்துல கெட்டப் நல்லா வந்துருக்கு என்றவர் அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், பிரபுதேவா தயாரிப்பில் ஒரு படம் என்று பிஸியாக இருக்கிறார்.

ஹாட்ரிக் ஹீரோ என்பதால் ‘மிருதன்’ படத்துக்கு தியேட்டர்காரர்கள் மத்தியில் படத்தை திரையிடுவதிலும் போட்டி ஏற்பட்டிருக்கிறதாம். இதுவரைக்கும் ரிலீசான ஜெயம் ரவியோட படங்களை விட இந்தப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீசாகிறது. 500 தியேட்டர்கள் வரை ரிலீஸ் கன்பார்ம் ஆகியிருக்கு. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். மேலும் அவர் ”ஒரு புது ஜானர், அது தமிழ்சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும்ங்கிற நம்பிக்கையில இந்தப்படத்தை செலவு பத்தி கவலைப்படாம எடுத்திருக்கிறேன்” என்றார்.

‘மிருதன்’ எந்த மாதிரியான கதை?

”தன்னோட தங்கச்சிக்காக எந்த விஷயத்திலுமே ரொம்ப ரிஸ்க் எடுக்கக்கூடாதுன்னு நெனைக்கிற ஒரு ஹீரோ. அப்பேர்ப்பட்ட ஹீரோவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டிய சிச்சுவேஷன் வர்றப்ப அதை அவர் எப்படி கையாளுகிறார் என்பது தான் கதை.

படத்துல வைரஸ் பரவுறதை ஒரு கதையா சொல்லியிருக்கோம், முக்கியமா இன்னைக்கு சூற்றுச்சூழல் மாசுபடுதல் மிகப்பெரிய பிரச்சனையா இருக்கு. அதைப்பத்தி மக்கள்கிட்ட விழிப்புணர்வு ரொம்ப முக்கியம். அதையும் ஒரு முக்கியமான விஷயமா இந்தப்படத்துல சொல்லியிருக்கோம்” என்ற இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன்.

டைட்டில், ஜானர், கதைக்களம் எல்லாமே புதுசா இருக்கு. அப்போ வெற்றியும் தமிழ்சினிமாவுக்கு புதுசா தான் இருக்கும் போல… வாழ்த்துகள் சார்…