காஜல் அகர்வாலின் உதவிக்கரம்

Get real time updates directly on you device, subscribe now.


இந்தக் கொரோனா வைரஸ் பாதிப்பால் கலையுலகத்தில் பணிபுரியும் தொழிலார்களின் வாழ்வாதரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் நலனுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார். மேலும் சில உதவிகளையும் அவர் செய்து வருகிறார். காஜல் அகர்வால் செய்துள்ள உதவிகளின் விபரம்:

நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

Related Posts
1 of 7

மேலும் கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார்.

மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் அருகளிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். மேலும் பீட்டாவுடன் இணைந்து விலங்குகளை தத்தெடுத்தும் உணவளித்தும் உதவி செய்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.