“முகிலன்” அக்டோபர் 30 ஆம் தேதி ZEE5ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது

Get real time updates directly on you device, subscribe now.

கார்த்திக் ராஜ் – ரம்யா பாண்டியன் நடிக்கும் “முகிலன்” ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு தரமான பொழுதுக்போக்குடைய படைப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அந்த வகையில், கார்த்திக் ராஜ் (செம்பருத்தி புகழ்) மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘முகிலன்’ வெப் சீரிஸ், ZEE5 தனது அடுத்த வெளியீடு என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

Related Posts
1 of 3

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸ் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது. பல திருப்பங்கள் கொண்ட திரைக்கதையால் மெருகூட்டப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸில் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டுகிறது.

ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.‘முகிலன்’ வெப் சீரிஸ்ஸை ஸ்ரீ ராம் ராம் எழுதி இயக்கியுள்ளார். தினேஷ் ரமணா (இன்சடியஸ் மீடியா), பால சுந்தரம் (இன்சிடியஸ் மீடியா), ஜெயச்சந்திரன் (இன்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்) ஆகியோர் தயாரித்துள்ளனர் பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.ஒளிப்பதிவு – ஃபாரூக் ஜே பாஷா ஆசிரியர் – தமிழ் அரசன் கலை – மணிமோழியன் ராமதுரை