ரஜினி – விஜய் படத் தயாரிப்பாளர்கள் கூட சந்தோஷமா இல்லையே..? : நக்கீரன் கோபால் வேதனை

Get real time updates directly on you device, subscribe now.

rajini---vijay

‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டனின் கதை, திரைக்கதையில் தயாராகியிருக்கும் படம் ‘கிருமி’.

ரஜினியின் உதவியாளர் ரஜினி ஜெயராமன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் நக்கீரன் கோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசும் போது ”இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெயராமன் எனக்கு நெருங்கிய நண்பர். நான் அண்ணன் ரஜினியைப் பார்க்கும் போதெல்லாம் அவரையும் பார்ப்பேன். ஒரு இடத்தில் இருக்க மாட்டார். ஓடிக்கொண்டே இருப்பார். ஜெயராமன் அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குபவர்.

மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ சமூக நோக்குள்ள படம் அதில் இப்படி ஒரு சமூகத்தோடுதான் வாழ்ந்து வருகிறோம் என்று அழகாகச் சொல்லியிருப்பார். அந்த மணிகண்டனின் கதை என்பதால் இந்தக் ‘கிருமி’யும் சமூகம் சார்ந்த சிந்தனையோடுதான் இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.kirumi

இன்று படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஆனால் டிவிக்காரர்கள் படத்தை வைத்து சம்பாதிக்கிறார்கள். ‘பாட்ஷா’ படத்தை தயாரித்த அண்ணன் ஆர் எம்வீ இப்போது வீட்டில் தான் இருக்கிறார். ஆனால் சன்டிவியில் ஒரு தடவை போட்டு ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள். ‘கில்லி’ படத்தை தயாரித்த அண்ணன் ஏ.எம். ரத்னம் வீட்டில் தான் சாதாரணமாக இருக்கிறார். ஆனால் சன்டிவியில் ஒருதடவை படத்தை போட்டு ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள்.

இந்தப் படத்தை தயாரிக்கும் ஜெயராமன் நேர்மையாக சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்கள். நேர்மையாக உள்ளவர்கள் வெற்றி பெற வேண்டும். தயாரிப்பாளர் ஜெயராமன் வெற்றிபெற நக்கீரன் என்றும் துணைநிற்கும் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.” என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ,துணைத்தலைவர்கள். பி.எல் தேனப்பன், கதிரேசன். தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சார்லி, படத்தின் நாயகன் கதிர், நாயகி ரேஷ்மி மேனன், நடிகை வனிதா, பாடகர் கானாபாலா, இசையமைப்பாளர் கே, ‘காக்கா முட்டை’ மணிகண்டன், ‘கிருமி’ யை இயக்கியுள்ள அனுசரண், ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், பாடலாசிரியர் ஞானகரவேல், தயாரிப்பாளர்கள் ரஜினி ஜெயராமன், கோவை ஜெயராமன், பிருத்திவிராஜ், ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

விழாவில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் ரஜினி மன்ற நிர்வாகிகளும் மட்டுமல்ல விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.