நெஞ்சுக்கு நீதி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மானுட விடுதலையை சட்டத்தின் வழி நின்று பெறவேண்டும் என்ற கருத்தை ஸ்ட்ராங்காக முன் வைக்கிறது நெஞ்சுக்கு நீதி திரைப்படம். மேலும் படம் முடிந்த பின் நாம் எடுத்துச் செல்வதற்கு அறம் சார்ந்த மனிதம் நிறைந்த எண்ணற்ற கருத்துக்களும் படத்தில் இருக்கிறது.

ஆதிக்கச் சாதியின் வெறியும் அதிகார மட்டமும் சேர்ந்து வன்புணர்வு செய்து இரு தலித் சிறுமிகளை கொலையும் செய்கிறது. அந்தக் கொலைகளுக்கான நீதியை சட்டத்தின் வழி நின்று உதயநிதி எப்படி பெற்றார் என்பதே படத்தின் கதை

இந்த ஒருபடம் போதும் உதயநிதி சினிமா கரியருக்கு. மனிதன் படத்திற்குப் பின் மிக எதார்த்தமாக நடித்துள்ளார் உதய். எமோஷ்னல் காட்சிகளிலும் ஓவர்டோஸ் இல்லாமல் நடித்து அப்ளாஸ் வாங்கிவிடுகிறார். ஆரி அர்ஜுனன் கேரக்டரும் படத்தில் சிறு அதிர்வை ஏற்படுத்துகிறது. சுந்தரம் என்ற பெயரில் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளவர் அட்டகாச நடிப்பால் ஈர்க்கிறார். மயில்சாமி இளவரசு உள்பட உதயநிதியின் போலீஸ் டீம் அனைவருமே பக்கா நடிப்பு

பின்னணி இசை இந்தப்படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து வேலை செய்திருக்கிறார் இசை அமைப்பாளர் திப்பு. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்தின் தனித்துவம். ஆர்ட்டிகிள் 15 படத்தில் இருந்த மேக்கிங் துளியும் இதில் மிஸ் ஆகவில்லை. படத்தின் ஆகப்பெரும் ப்ளஸ் வசனங்கள். குறைந்த பட்சம் 15 இடங்களிலாவது கைத்தட்டல் கன்பார்ம். கங்ராட்ஸ் தமிழ்

ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை முழுமையாக உணர்ந்த ஒரு கலைஞனால் தான் இவ்வளவு நேர்த்தியாக படத்தை எடுக்க முடியும் என்பதை அருண்ராஜா காமராஜ் நிரூபித்துள்ளார். படத்தின் திரைக்கதையின் போக்கு பின்பாதியில் சின்ன ஜம்ப் ஆக இருந்தாலும் படத்தின் முடிவு நெஞ்சுக்குள் வந்தமர்வதால் நெஞ்சுக்கு நீதி நாம் பார்த்தே ஆகவேண்டிய படமாகிறது

3.75/5