பட்டாஸ்- விமர்சனம்

RATING : 2.5/5
அடிமுறை என்ற தமிழரின் தற்காப்புக் கலையை அறிமுகப் படுத்திய விதத்தில் ஒரு அட்டகாச ஐடியா பட்டாஸ். பட் சோகம் என்னன்னா படத்தில் அது மட்டும் தான் புதுசு. மற்றபடி வழக்கம் போல் பழி வாங்கும் கதை தான்.
இரு வேடங்களிலும் தனுஷ் பட்டாஸாகப் பொருந்துகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அப்பா கேரக்டரில் தனுஷ் சூப்பர். சண்டைக்காட்சிகளில் அவரின் உழைப்பு அபாரம். “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் எதற்கு” என்ற அண்ணாவின் வாக்கியத்தோடு இந்தப்படத்தில் ஹீரோயின் எதற்கு என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஹீரோயின் கேரக்டர் அவ்ளோ வீக்-ஆக எழுதப்பட்டுள்ளது. அது வில்லனுக்கும் பொருந்தும். விஜய்டிவி சதிஷ் அடிக்கும் டைமிங் காமெடி நல்ல ஆறுதல். முனிஷ்காந்த், நாசர் கேரக்டர்கள் பெரிய எபெக்டை கொடுக்கவில்லை. தனுஷுக்கு அடுத்து படத்தில் பெரும்பங்கை காப்பாற்றி இருப்பது சினேகா தான். செம்ம ஸ்ட்ராங் ஆக்டிங்!
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, விவேக் மெர்வின் பின்னணி இசை இரண்டும் பட்டாஸை நமத்துப் போக விடாமல் வைத்திருக்க போராடியுள்ளது. படத்தின் முன்பாதியில் கதையில் வெயிட் இல்லாவிட்டாலும் திரைக்கதையில் ஒரு க்யூட் இருந்தது. பின்பாதியில் அது சொத்தென்று போய்விட்டது.
தமிழர்களின் கலாச்சாரம் தொன்மக்கலையைப் பற்றிய நினைவூட்டல் என்ற விசயம் என படம் பேச வந்த மேட்டர் நல்ல முயற்சிதான். அதை எடுத்த விதம் தான் சொதப்பியுள்ளது.