கமல்ஹாசன் ரூட்டு : புத்திசாலி சிவகார்த்திகேயன்!

Get real time updates directly on you device, subscribe now.

SIVAKARTHIKEYAN

ந்த அவதாரமாக இருந்தாலும் அதில் ஹிட்டடிப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடிப்பதோடு மட்டுமில்லாமல் பாடல் பாடுவது பின்னணி குரல் கொடுப்பது என திரைக்கு பின்னால் இருக்கிற வேலைகளையும் சளைக்காமல் செய்பவர்.

அப்படித்தான் அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்தில் நடித்த கமல் அந்த கேரக்டருக்கு தானே டப்பிங் பேசினார். படம் ரிலீசாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.

அந்த வழியிலேயே இப்போது தானும் தன்னுடைய வேடத்துக்கு பெண் குரலில் டப்பிங் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம்.

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’படத்தில் பெண் வேடத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டருக்கு ஒரு பெண்ணை டப்பிங் பேச இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் முடிவு செய்திருந்தார். ஆனால், அதைக் கேள்விப்பட்ட சிவகார்த்திகேயனோ நானே பெண் குரலில் பேசுகிறேன் என்று சொல்லி விட்டாராம்.

Related Posts
1 of 43

ஏற்கனவே சிவகார்த்திகேயன் பலகுரலில் பேசுவதில் கை தேர்ந்தவர் என்பதால் இயக்குநர் பாக்யராஜ் கண்ணனும் சிவகார்த்திகேயன் விருப்பத்திற்கு ஓ.கே சொல்லி விட்டார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் கேரியரிலேயே மிக அதிக பொருட் செலவில் தயாராகி வரும் படம் இந்த ரொமோ என்பது குறிப்பிடத்தக்கது.

கெத்தா ஒரு படம்…