“பெருசு” படத்தின் பிரஸ்மீட்!

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இயக்குநர் இளங்கோ ராம், “படத்தை நல்லவிதமாக கொண்டு போய் சேர்க்க நல்ல பேனர் கொண்ட தயாரிப்பாளர்கள் முக்கியம். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. ‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற எண்பதுகளில் வந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல, குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கும்படியாக இந்தப் படம் இருக்கும். வைபவ்- சுனில் இந்த கதைக்கும் மிகப்பொருத்தமாக இருந்தார்கள். தனம், சுவாமிநாதன், கஜராஜ், தீபா என எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். எந்த இடத்திலும் முகம் சுழிக்க மாட்டீர்கள். நல்ல டீம் எனக்கு கிடைத்துள்ளது”.

நடிகர் வைபவ், “குடும்பத்துடன் பார்க்கும்படியான சூப்பராக கதையாக வந்துள்ளது. மார்ச் 14 நீங்கள் திரையரங்கில் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். தனம் அம்மா நடிப்பில் பின்னியிருக்கிறார். கஜராஜ், ரெடின், முனீஷ்காந்த் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் செம ஜாலியாக சென்றது. உங்களைப் போலவே நானும் படம் பார்க்க ஆவலாக உள்ளேன். என் அண்ணன் கூட முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கிறேன். நன்றி”.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “நானும் ராம் சாரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் நல்ல படங்கள் வந்தால் என்னிடம் சொவ்லார். அப்படித்தான் ‘கூழாங்கல்’ படம் நாங்கள் பிரசண்ட் செய்வதாக இருந்தது. சில காரணங்களால் அது மிஸ் ஆனது. பின்பு ராம் சார் சொன்ன படம் தான் இந்த ‘பெருசு’. மற்றவர்களை சிரிக்க வைப்பது கடினமான விஷயம். பாலாஜி சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நானும்தான் வைபவ்வும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். தனலட்சுமி மேம் சூப்பராக நடித்திருந்தார். சுவாமிநாதன், அப்பா, கருணா, கிங்க்ஸ்லி, முனீஷ்காந்த், சாந்தினி, நிஹாரிகா, சுனில் எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சரியாக எழுதப்பட்ட கதை இது. உங்கள் ஆதரவு தேவை” என்றார்.