சஸ்பென்ஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’!

Get real time updates directly on you device, subscribe now.

ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’.

பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் கதைக்குத் தேவையான முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலைசாமி ஏ எம் ராஜா நடித்திருக்கிறார்.

சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பாலு இயக்கியுள்ளார்..

இதற்கு முன்னதாக இவர் இயக்கியுள்ள ‘பகை மிரள’ என்கிற திரைப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.,.

‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வெற்றி, காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா ஆகியோர் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டனர்..