பிரபலங்கள் வெளியிட்ட”போர போக்குல” இசை வீடியோ!

Get real time updates directly on you device, subscribe now.

“போர போக்குல” இசை வீடியோ வில் யதீஷ்வர் ராஜா பாடிய பாடலை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
அவர்கள் வெளியிட்டுள்ளார்

“போர போக்குல” இசை வீடியோ வில் இசைஞானி இளையராஜா பாடிய பாடலை விண்வெளி நாயகன் கமலஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்

இரண்டு சிறப்பு பதிப்புகளாக வெளியான இப்பாடலை இசைஞானி இளையராஜாஅவர்கள் குரலிலும் யதீஷ்வர் ராஜா அவர்களின் குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது

இப் பாடலுக்கு இசை – யதீஷ்வர் ராஜா இரண்டு தலைமுறைகளின் இசை மேதைகள் இணைந்திருக்கும் அபூர்வ தருணம் இது.

Related Posts
1 of 2,190

இந்த வீடியோவில் நடிகர் ரகுவரன் தம்பி சுரேஷ் (செட் பயர் ஸ்டுடியோ) அவர்களின் மகன் ரித்திஷ் நடிக்க அவருக்கு இணையாக ஃபைட் கிளப் திரைப்படத்தில் நடித்த மோனிஷாவும் நடித்துள்ளனர்

இப் பாடலின் வரிகளை தமிழ் சினிமாவில் தனக்கான தனித்துவமான எழுத்துக்களால் கவனம் பெற்ற விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.

இசை வீடியோவுக்கு இயக்கம் செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் பி.கே, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முன்னாள் உதவியாளர். புதுமையான காட்சியமைப்புடன் அவர் இந்த கலைப்பணியை உருவாக்கியுள்ளார்.

பல்வேறு திறமைகளை ஒருங்கே கொண்டு வந்திருக்கும் “போர போக்குல” பாடலின்
இசை தமிழ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கவுள்ளது…