சைக்கோ- விமர்சனம்

RATING : 3/5
படம் துவங்கும் போதே மிஷ்கினின் அடம் துவங்கி விடுகிறது. முதல்ஷாட்டே வெட்டு தான். திரையில் ஒளி வந்ததும் கதை துவங்கி விடுவது ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியருக்குத் தான் வரும். மிஷ்கின் அதில் வல்லுநர். ஆனால் சைக்கோவில் அவர் செய்து வைத்திருக்கும் பல காரியங்கள் பார்வையாளர்களை அலற வைக்கும் என்பதில் ஐயமில்லை.
பார்வையில்லாதவனின் காதலியை கடத்திச் செல்கிறான் ஒரு சைக்கோ கில்லர். அவனிடம் இருந்து காதலியை ஹீரோ எப்படி மீட்கிறார் என்பது தான் சைக்கோ கதை.
உதயநிதி ஸ்டாலின் எப்போவாவது நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப்படத்தில் அவர் அதைச் சரிவர செய்துள்ளார். இருந்தாலும் எமோஷ்னல் காட்சிகளில் அமுல்பேபி வந்து எட்டிப்பார்ப்பது தவிர்க்க இயலாத சோகம். சைக்கோவாக வரும் ராஜ் மிரட்டி இருக்கிறார். முழியும் நடையும் அசாத்தியம். போலிஸ் அதிகாரி ராம், மாற்றுத் திறனாளி நித்யாமேனன், ஆர்.ஜே அதிதீ என நட்சத்திரங்கள் எல்லோரும் நடிப்பில் ஜொலிக்கவே செய்துள்ளனர். இவர்களுக்காக எழுதப்பட்ட பின் கதையில் போதிய அழுத்தமில்லை என்பது நம்மை இவர்களோடு பயணிக்க வைக்க மறுக்கிறது.
படத்தில் லாஜிக் ஓட்டைகள் சைக்கோ என்றால் இளையராஜா தான் அனைத்தையும் காப்பாற்றும் கடவுள். படம் தேங்கி தூங்கிவிடாமல் இருப்பதற்கான காரணம் ராஜா…ராஜா..ராஜாவே தான். எந்த இடத்தில் இசை தேவை என்பதிலுல் தேவை இல்லை என்பதிலும் அவர் கொண்டுள்ள கவனம் இனி வேறு யாருக்குமே தெரியாது என்பது உண்மை. ..
அடுத்த ஹீரோ ஒளிப்பதிவாளர் ரன்வீர் ஒருசில விஷுவல்ஸ் எல்லாம் உலகத்தரம். ஷார்ப்பான எடிட்டிங்கும் படத்தின் தரமான மேட்டர்.
இந்த சைக்கோ ஏன் இவ்வளவு கொலை செய்கிறார் என்பதற்கான பின்கதை அவ்வளவு ஸ்ட்ராங்காக இல்லை. படத்தின் ஆதாரமான அந்த விசயமே ஆட்டம் காண்பதால் தான் சைக்கோ வலுவாக பிசிரடிக்கிறது. பட் படத்தின் மேக்கிங் என்ற அற்புதம் இருக்குறதே…அதற்காகவே சைக்கோவை தரிசிக்கலாம்!R