அப்பாடா… அருள்நிதிக்கு ஜோடி கெடைச்சாச்சு..!!

Get real time updates directly on you device, subscribe now.

arul-nithi

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சேதுபதி” படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் தயாராகி வரும் “எனக்கு வாய்த்த அடிமைகள்” திரைப்படத்தை தயாரிப்பவருமான ஷான் சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

அபியும் நானும், மொழி, பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன், இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

தொடர்ந்து வித்தியாசமான வெற்றிப் படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வரும் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது நாயகி மட்டும் கிடைக்காமல் இருந்தது.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டுமென்கிற சூழலில் நாயகி வேட்டை தொடர்ந்தது.

தற்போது ஒருவழியாக அருள்நிதிக்கு ஜோடியாக புதுமுக தான்யா கமிட்டாகியிருக்கிறார்.

இதில் விசேஷம் என்னவென்றால் ஹீரோ அருள்நிதி கலைஞரின் பேரன், அதேபோல நாயகி தான்யா பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியாம். மேலும் இருவரும் கதாநாயகன் கதாநாயகியாக நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொள்ள,வசனம் பொன் பார்த்திபன்

மற்ற நடிகர் நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.