விக்ரம் பிரபு நடிக்கும் ‘ரெய்டு’!

‘டாணாக்காரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகர் விக்ரம் பிரபு அடுத்து வரவிருக்கும் தனது ‘ரெய்டு’ படம் மூலம் இன்னும் அதிக அளவிலான பார்வையாளர்களைக் கவர உள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
இருக்கை நுனியில் அமரும்படியான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே @ மணிகண்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.