ஸ்டைலிஷான தாமோதர் கதாபாத்திரத்தில் ரஹ்மான் கலக்கப் போகும் ‘ரணம்’
தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர் போனவர் நடிகர் ரஹ்மான். அவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் தமிழ், மலையாளம் மொழிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது அவர் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ரணம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ப்ரிதிவிராஜும், ரஹ்மானும் நடித்துள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘ரணம்’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது. ரணம் திரைப்படத்தில் ரஹ்மான் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரணம் திரைப்படத்திலிருந்து ரஹ்மான் நடிப்பில் ரஹ்மான் மிகவும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் தோன்றி தனது கதாபாத்திரத்தை பற்றி கூறுவது போன்ற ‘தாமோதரின் Law of Survival’ என்ற டீசர் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இஷா தல்வார் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார்.