மார்ச் 8ல் எட்டு மொழிகளில் வெளியாகிறது’ரெக்கார்ட் பிரேக்’!

Get real time updates directly on you device, subscribe now.

ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் ‘ரெக்கார்ட் பிரேக்’. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் நாகர்ஜூனா, “இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்” என்றார்.

Related Posts
1 of 2,182

நடிகர் நிஹார், “இது என்னுடைய இரண்டாவது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் தான் தெலுங்கு உட்பட எட்டு மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்திருக்கிறோம். பெரிய திரையில் பார்க்கும்பொழுது அதன் அனுபவத்தை உங்களால் உணர முடியும். யாரும் இல்லாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். உங்களுக்கும் படம் பிடிக்கும்”.

நடிகை ராக்தா, ” நான் முதல் முறையாக சென்னைக்கு வந்து இருக்கிறேன். இந்த படம் ஒரு சிறந்த கருத்தை பேசி இருக்கிறது. தெலுங்கு பார்வையாளர்கள், தமிழ் பார்வையாளர்கள் என இல்லாமல் எல்லோருக்குமான பான் இந்தியா படமாக இது உருவாகி இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். இந்தப் படத்தை உருவாக்கிய ஸ்ரீனிவாஸ் சாருக்கு நன்றி. மார்ச் 8 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது”.

நடிகை சத்யா, ” மார்ச் 8 அன்று இந்த படத்தை நாங்கள் வெளியிடுகிறோம். எட்டு வெவ்வேறு மொழிகளில் இந்த படத்தை டப் செய்து இருக்கிறோம். ரொம்ப வித்தியாசமான கதை இதில் உள்ளது. நீங்கள் நிச்சயம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்”.