பரம்பொருள்- விமர்சனம்
சிலை கடத்தல் பின்னணியில் சிலபல சஸ்பென்ஸ்கள் வைத்து வசூல் எனும் பொருள் சேர்க்க வந்திருக்கிறது பரம்பொருள்
நேர்மையன்பது இல்லாத போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமார் கையில் வசமாக சிக்குகிறார் ஹீரோ அமிதாஸ். அவருக்கு சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு இருப்பதாகத் தெரிய வருகிறது. சரத்குமார் கைக்கு வந்து சேர்ந்துள்ள சிலையை அமிதாஸை வைத்து விற்க முனைகிறார் சரத். அவரின் எண்ணம் ஈடேறியதா? இடையில் அமிதாஸ் என்னென்ன வேலைகள் செய்தார்? என்பதே பரம்பொருளின் மீதிக்கதை
சரத்குமாரை சரத்குமரன் என்று சொல்லலாம். அந்தளவிற்கு பிட்னெஸ் மற்றும் எனர்ஜியோடு இருக்கிறார். அவரின் நடிப்பு கேஷுவலாக இருந்தாலும் அவரது கேரக்டருக்கான ரைட்டிங்கில் பெப் இல்லை. அமிதாஸ் கேரக்டர் கன கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அவரும் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்து படத்தில் ஸ்கோர் செய்வது பாலாஜி சக்திவேல் தான். சற்று நேரமே வந்தாலும் திரைக்கதையில் தீயை பற்ற வைப்பது அவர் தான். ஹீரோயின் கேரக்டர் படத்தில் தேவையில்லாத ஆணியாகவே வருகிறது. வில்லன்களும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை
யுவன்சங்கர் ராஜா தான் இசை அமைப்பாளர் என்பதை பின்னணி இசையை வைத்துத் தான் சொல்ல முடிகிறது. பாடல்கள் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு தனிப்பதிவாக அமைந்துள்ளது. சில ஷாட்களில் மட்டும் டெக்னிக்கல் எரர். எடிட்டர் இன்னும் காட்சிகளுக்குள் முழுமையாக புகுந்து சில புட்டேஜ்களை ஷார்ப் செய்திருக்கலாம்
பரபரவென நகர வேண்டிய கதைக்கரு கொண்ட படம். மிக மெதுவாகவே நகர்கிறது. சரத்குமார் கேரக்டரில் இன்னும் ஒரு தெளிவு இருந்திருக்கலாம். அவர் புத்திசாலியா? கொடூரமானவரா? ஏமாறும் கெட்டவரா என தெளிவாக வடிவமைக்கப்படவில்லை. கடைசியில் வெடிக்கும் அந்த ட்விஸ்ட்க்காக மட்டும் ஒருமுறை பார்க்கலாம்
2.75/5