கிராமத்துப் பெண்ணின் நகரத்து சிரமங்களை படம் பிடித்துக் காட்டும் ‘ரீல்’

Get real time updates directly on you device, subscribe now.

காதல் ரசம் சொட்ட சொட்ட ரிலீசாகும் படங்கள் தமிழில் புதுசில்லை என்றாலும் சில படங்களின் டைட்டிலே ‘அட’ போட வைத்து அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற ஆவலையும் தூண்டி விடும்.

அப்படி ஒரு டைட்டிலை தான் இயக்கும் முதல் படத்துக்கு வைத்திருக்கிறார் இயக்குனர் முனுசாமி. ‘ரீல்’ என்ற டைட்டிலில் தயாராகும் இப்படத்தில் புதுமுகங்கள் உதய்ராஜ் – அவந்திகா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீ முருகா மூவி மேக்கர் தயாரித்திருக்கும் இப்படத்தைப் பற்றி இயக்குனர் முனுசாமியிடம் கேட்டபோது, “இந்தப் படம் வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சென்னை மாதிரியான பெருநகரங்களுக்கு ஒரு கிராமத்துப் பெண் வரும்போது அவளை இந்த சமூகம் எப்படி எப்படி நடத்துகிறது? என்பதையும் பேசுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி பேசும்படியாக இருக்கும்’’ என்றார்,

“இந்தப்படம் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை முறைகளை சுற்றியது. சரியாகச் சொல்வதென்றால், வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒரு பையனை பற்றியும், கிராமத்தில் இருந்து தன் வாழ்வாதாரத்திற்காக நகரத்துக்கு வந்த பெண்ணை பற்றியும் பேசும் படம்.

அவளது அப்பாவியான தன்மையால் அவளை அனைவரும் ஏமாற்றுகிறார்கள். இந்த இருவரும் எவ்வாறு சந்தித்துக் கொள்கிறார்கள், அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை.

மலையாளத்தில் நான் நடித்த சில குறும்படங்களின் மூலம் தான். அங்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும், என் முக்கிய நோக்கம் தமிழ் படத்தில் நடிப்பதே. இப்போது ‘ரீல்’ படத்தின் மூலம் அது நிறைவேறி இருக்கிறது” என்றார் நாயகன் உதயராஜ்.

கோவை ,மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்த நிலையில், இம்மாத வெளியீடாக படம் வர இருக்கிறது.