ரிவால்வர் ரீட்டா- விமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் சோலாவாக களமிறங்கியுள்ள படம். எப்படி இருக்கு?
ரெட்லைட் வீட்டிற்கு செல்வதற்குப் பதிலாக எளிமையான ட்யூப்லைட் வீட்டிற்குள் சென்று விடுகிறார் வில்லன் சூப்பர் சூப்பராயன். யெஸ் தன் ஆசைநாயகிகள் வீட்டிற்கு செல்வதற்குப் பதிலாக எளிமையான வாழ்வை வாழும் ராதிகா கீர்த்தி சுரேஷ் குடும்பத்திற்குள் சென்று விடுகிறார். அதனால் அவரை கொலை செய்துவிடுகிறது கீர்த்தி குடும்பம். மேலும் உள்ளூர் போலீஸோடும் கீர்த்திக்கு ஒரு பஞ்சாயத்து இருக்க, இவற்றையெல்லாம் அவர் எப்படிச் சமாளித்தார் என்பதே கதை
கதையின் நாயகியாக மகாநடிகை கீர்த்தி சுரேஷ் நிறைய காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். ஆனால் ஆக்சன் காட்சிகளில் மட்டும் ஸ்கோரிங் மிஸ்ஸிங். ராதிகா சரத்குமார் அடிக்கும் லூட்டிகளில் அரங்கம் அல்லு சில்லாகிறது. அவரது நடிப்பு படத்திற்கு பெரும்பலம். சூப்பர் சூப்பராயன், சுனில், கிங்ஸ்ட்லி, ஜான் விஜய் ஆகியோரும் படத்திலுள்ளனர்
ஒளிப்பதிவாளர் தினேஷ் இன்னும் அட்டகாசமான கம்போஸிங்கை செய்திருக்க முடியும். ஏனோ நல் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். போலவே இசை அமைப்பாளரும் இன்னும் கொஞ்சம் எனர்ஜி ஏற்றியிருக்கலாம். எடிட்டர் பிரவீன் கே.எல் கிரிஷ்ப்பாக கட் செய்துள்ளார்
ஒரு சாதாரண குடும்பம் அசாதாரண பிரச்சனையைக் கையாளும் போது ஏற்படும் சிக்கல்களை சிறப்பாகப் பேசியுள்ளார் இயக்குநர் JK சந்துரு. ஆனால் முழு என்சாய்மெண்டிற்கு இது போதவில்லை. இன்னும் வசனங்களை ஷார்ப் செய்து, காட்சிகள் வழியாக காமெடியை கூட்டியிருந்தால் ரீட்டாவின் தோட்டா பலமாக வெடித்திருக்கும்
2.75/5