”அந்த மேட்டருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க” : அலறிய ரோபோ சங்கர்
2009ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் ஆஜராகாத சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு நேற்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது ஊட்டி கோர்ட். கோடம்பாக்கத்தில் பரபரப்பை உண்டாக்கிய இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
அதோடு சில திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், சின்னத்திரை பிரபலம் ரோபோ சங்கரும் சூர்யாவின் பேச்சில் என்ன தவறு இருக்கிறது? என்று அவருக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அலறியடித்துக் கொண்டு வந்த ரோபோ சங்கர் அது என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டே இல்லை என்று வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசிய வீடியோவை கீழே கிளிக் செய்து பாருங்கள் :