சாதனை படைத்த சூர்யா பட டீசர்!
மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை டீசர் பெற்றுள்ளது. இந்த பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
நடிகர் சூர்யாவின் ஈர்க்கும் திரை இருப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும், அசத்தலான காட்சியமைப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூடுதலாக, ’அனிமல்’ படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோலின் வலுவான நடிப்பும் படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது. டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.