பைனான்ஸ் ப்ராப்ளம் – என்னடா இது சந்தானத்துக்கு வந்த சோதனை?
மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி செய்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த உடன் மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி செய்வதை முழுமையாக நிறுத்தி விட்டார் சந்தானம்.
காமெடியனாக இருந்த வரை டைரக்டர் சொன்ன காட்சிகளில் நடித்தோமா? கையில் நாலு காசைப் பார்த்தோமா? என்று எக்கச்சக்க பண வரவுடனும், நிம்மதியாகவும் இருந்தார்.
ஆனால் இப்போது ஹீரோவானவுடம் ஒவ்வொரு படத்துக்கும் அதிக கால இடைவெளி ஏற்பட்டு விட்டது. அது மட்டும் ஏற்பட்டால் பரவாயில்லை.
தற்போது அவர் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படம் பைனான்ஸ் ட்ரபுளில் சிக்கித் தவித்து நிற்கிறது என்பதுதான் சோதனை.
ஆனந்த் பால்கி இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார்.
எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம், தொடர் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி இன்னும் ரிலீஸாக முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
இதனால் அந்தப் படத்துக்குப் பிறகு தான் ‘சக்க போடு போடு ராஜா’ ரிலீஸ் செய்யச் சொல்லலாம் என்று நினைத்த சந்தானம் நிறைய கால இடைவெளி ஏற்பட்டு விட்டதால் இப்போதைக்கு ஏதாவது ஒரு படம் ரிலீஸ் ஆவது தான் தனக்கு நல்லது என்று சக்க போடு போடு ராஜா படத்தை ரிலீஸ் செய்யச் சொல்லி அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வி.டி.வி கணேஷிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
அவரும் சந்தானத்துக்கு நெருக்கமானவர் என்பதால் சந்தானம் விருப்பப்படியே விரைவில் சக்க போடு போடு ராஜா படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார் வி.டி.வி கணேஷ்.