‘ஷெரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகி வரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஷெரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படத்தின் கதையின் நாயகியான நடிகை சன்னிலியோன் மற்றும் இயக்குனர் ஸ்ரீஜித் இருவரும் இணைந்து அறிவித்திருக்கிறார்கள் .

இதுதொடர்பாக நடிகை சன்னி லியோன் பேசுகையில்,’ ஷெரோ போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷெரோவும் ஒன்று. சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.’ என்றார்.