மீண்டும் பாலாவோடு கை கோர்க்கும் சூர்யா!
தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாததால் துருவ் விக்ரமை வைத்து, பாலா இயக்கிய ‘வர்மா’ படம் திடீரென்று கைவிடப்பட்டது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பாலா தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்கும் பொருட்டு அடுத்த படத்துக்கான வேலைகளில் தடபுடலாக இறங்கினார்.
அதற்காக ராமேஸ்வரம் சென்று அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தை பார்வையிட்டு வந்த புகைப்படங்கள் கூட வெளியானது. இந்தப் படத்தில் ஆர்யா தான் ஹீரோ என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் பாலா தரப்பில் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையே ‘நந்தா’, ‘பிதா மகன்’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து புதுப்படம் ஒன்றை பாலா இயக்கத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
குறுகிய கால படைப்பாக தயாராகும் இப்படத்தை சூர்யாவே தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து ஹீரோவாக நடிக்கிறாராம். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.