சூர்யாவின் பிறந்த நாளில் வெளியான ‘NGK’ டைட்டில் ரகசியம்!
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு ஜூலை 23-ம் தேதியான இன்று 43வது பிறந்த நாள்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட நற்பணிகளை முன்னெடுத்து சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
சூர்யாவின் பிறந்த நாளை நற்பணிகளோடு கொண்டாடும் ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாள் பரிசாக அவர் நடித்து வரும் NGK படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.
செல்வராகவன் இயக்கும் இப்படத்தின் டைட்டில் ரகசியம் என்னவென்று தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த செகண்ட் லுக் போஸ்டரில் பதில் கிடைத்திருக்கிறது.
அதாவது ‘நந்த கோபாலன் குமரன்’ என்ற பெயரின் சுருக்கம் தான் NGK என்பதற்கான அர்த்தமாம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.