ஓடிடி தளத்தில் வெளியாகும் ’சிங்க்’!
ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில் ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் நடிகர் கிஷன் பேசியதாவது,
“என்னுடைய முதல் படமான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்திற்கு ஆதரவு கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. ’சிங்க்’ படத்திற்காக இயக்குநர் விகாஸ் கடுமையாக உழைத்துள்ளார். இந்த படமும் பட்ஜெட்டும் சின்னதாக இருக்கலாம். ஆனால், நிறைய கனவுகளோடு இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அந்த வகையில் இது பெரிய படம்தான். படக்குழுவில் உள்ள அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் படம் எடுத்து முடித்ததும், ’ஓடிடியில் தான் ரிலீஸ் செய்ய உள்ளோம், பார்த்து விட்டு சொல்லுங்கள்’ என்று ட்வீட் ஒன்று போட்டேன். டிவீட் போட்ட ஐந்து மணி நேரத்திற்குள்ளேயே நித்திஷ் எங்களை தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தினார். சுரேஷ் சந்திரா அப்பாவுடன் ஒரு புராஜெக்ட்டில் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது. உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்றார்.