டாணாக்காரன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் கலைப்படைப்பு நாம் கொண்டாடத் தயங்கவே கூடாது. டாணாக்காரன் கொண்டாடப்பட வேண்டியவன்

போலீஸ் வேலை பெறுவதே லட்சியம் என ட்ரைனிங் களத்திற்குள் வருகிறார் நாயகன் விக்ரம் பிரபு. அங்கு பயிற்சி அதிகாரியாக இருக்கும் லால் வருணம் பார்த்து விக்ரம் பிரபுவை பலிவாங்க முடிவு செய்ய, விக்ரம் பிரபுவோ இங்கு பயிற்சி என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களை எல்லாம் அத்தெறிய நினைக்கிறார். நினைத்தது நடந்ததா என்பதே கதை

விக்ரம் பிரபு கேரக்டருக்கு ஏற்ற அளவில் உடம்பை வைத்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் கூட தேறிவிடுகிறார். லால் படத்தை மொத்தமாக தாங்கிக் கொள்ள, எம்.எஸ் பாஸ்கர் அதகளமாக ஸ்கோர் செய்கிறார். அஞ்சலி நாயர் கேரக்டருக்கு பெரிய வலுவில்லை
போஸ்வெங்கட் நச் ரகம்

படத்தின் பெரும் பலங்களில் ஒருபலம் ஜிப்ரானின் பின்னணி இசை. ஒரே இடத்தில் நடக்கும் கதை என்றாலும் ஒளிப்பதிவில் சலிப்பே இல்லாத வகையில் உழைத்திருக்கிறார் கேமராமேன்.

விறுவிறுவென பறக்கும் படத்தில் வசனங்களிலும் கூர்மை இருப்பது கூடுதல் ப்ளஸ். படத்தின் முடிவில் இருக்கும் எதார்த்தம் தான் நம் நாட்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை படம் புடித்து காட்டுகிறார். தமிழ் சினிமாவில் இயக்குநர் தமிழ் முதல் படத்திலே அசுரப்பாய்ச்சல் பாய்ந்துள்ளார்..

டாணாக்காரன்-சல்யூட்
4/5