தண்டகாரண்யம்- விமர்சனம்

நீலம் தயாரிப்பில் மற்றொரு ஆழமான படம்
நாயகன் கலையரசன் வனக்காவலர் பயிற்சி முகாமில் கொடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. கலையரசன் யார்? அவருக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம் என விரிகிறது படம். பழங்குடி இனத்தைச் சேர்ந்த கலையரசனை அவரது அண்ணனான தினேஷ் கஷ்டப்பட்டு இந்த வேலைக்காக தயார் செய்து அனுப்புகிறார். வேலைக்காகச் சென்ற தம்பிக்கு வெற்றி கிட்டியதா என்பதை பதைபதைக்கச் சொல்கிறது மீதிக்கதை
பழங்குடி மக்களில் கம்யூனிசம் பேசும் ஒருவராக அசத்தியுள்ளார் நாயகன் தினேஷ். அதே இனத்தின் துடிப்பான இளைஞனாக வாழ்ந்துள்ளார் கலையரசன். வின்சு சாம் ரித்விகா இருவரும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். டான்ஸிங் ரோஸ் அசத்தியுள்ளார். பாலசரவணன் அருள்தாஸ் தங்களுக்கு வழங்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர்
ஜஸ்டின் பிரபாகரன் அருமையான பின்னணி இசையை வழங்கி கவனிக்க வைக்கிறார். பாடல்களும் இதமான உணர்வைத் தருகிறது. பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். கிருஷ்ணகிரியின் அடர்ந்த காடுகளை நேர்த்தியாகப் படம் பிடித்துள்ளார்
நக்சலைட்டுகள் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்து, அவர்களைப் பிடித்ததாக எளிய மக்களைப் பிடித்துக் கணக்குக் காட்டிய அரசின் மோசடியை படம் அம்பலப்படுத்தியுள்ளது. 2009-ல் நடக்கும் கதை என்பதால் சென்சார் கிடைத்துள்ளது போல. பெரிய அரசியலைப் பேசினாலும் கமர்சியம் அம்சத்தோடு தான் நகர்கிறது படம். அவ்வகையில் தண்டகாரண்யம் உங்களை ஏமாற்றாது
3.25/5