நானும் சிங்கிள் தான் – விமர்சனம்

“அவசரத்துல செஞ்ச நூடூல்ஸை ஆறின பிறகு வாயில போட்டா… அப்புறம் தான் தெரிஞ்சிது அது ஆறிப்போன நூடூல்ஸ் இல்ல..ஆல்ரெடி நாறிப்போன நூடூல்ஸ்னு” நானும் சிங்கிள் தான் என்ற டைட்டிலை மட்டும் கேட்சிங்கா வச்சிட்டு..பெண்களை எவ்வளவு சிறுமைப் படுத்தி படம் எடுக்கணுமோ அப்படி எடுத்து வச்சிருக்கார் இயக்குநர் ஆர்.கோபி. படத்தில் வர்ற பல வசனங்களைப் பார்த்தால் யார் கோபி?னு கோபத்தில் கேட்கும் அளவில் இருக்கிறது.

மிங்கிளாக வேண்டி சிங்கிளா இருக்குற ஹீரோ சிங்கிளாவே இருக்குற ஹீரோயின் இவங்களுக்குள்ள வர்ற காதல் மோதல் தான் படத்தின் கதை. டாட்டூ போடும் தொழில் செய்யும் ஹீரோ பாத்திரம் சினிமாவிற்கு புதுசு. இந்தப்படத்தில் அது மட்டுமே புதுசு. மத்தபடி கதையும் காட்சிகளும் கதையை நகர்த்தும் திரைக்கதையும் பழசோ பழசு.

தினேஷின் நடிப்பு அட்டக்கத்தி என்றால் நாயகி தீப்திசதி நடிப்பு வெறும் மொட்டக்கத்தி. எடிட்டர் தன் கத்தியை பல இடங்களில் வைத்திருக்கலாம். வெறும் வசனங்களை வைத்தே மொத்தப்படத்தையும் நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.

ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களில் கதிர் மட்டும் தான் கவனிக்க வைக்கிறார். ஆனாலும் அவர் பேசும் வசனங்கள் மூலமாக அநியாயத்திற்கு முகம் சுளிக்க வைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அவ்வளவு சிறப்பாக கூடிவரவில்லை. 90 கிட்ஸை குறி வைத்து எடுக்கப்பட்ட படத்தில் 90 காலகட்டத்தின் கதை நகர்வே போதும் என முடிவெடுத்து விட்டார்கள் போல. இயக்குநர் கோபி டிவியில் இருந்து திரைக்கு வந்தவராம்.
ப்ரோ கொஞ்சம் அப்டேட் ஆகிட்டு அடுத்து சிங்கிள் அடிக்காமல் சிக்ஸ் அடிக்க ட்ரைப் பண்ணுங்க
2/5