தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு!
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் “புஜ்ஜி தல்லி” ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் “நமோ நம சிவாய” பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் கம்பீரத்தை ஒரு இணையற்ற ஆடியோ-விஷுவல் அனுபவமாகக் கலந்து தந்து, ஒரு தலைசிறந்த படைப்பாக மஹாதேவனின் மகிமையைப் போற்றுகிறது. இந்தப் பாடலானது ஒரு தெய்வீகத் தன்மையுடன், நம்முள் ஒரு ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது. பார்வையாளர்களைப் பயபக்தியுடன் கூடிய பிரமிப்பைத் தருகிறது.