அக்டோபர் 10ல் திரையரங்குகளில் வெளியாகிறது ’டிரான்: ஏரஸ்’!

Get real time updates directly on you device, subscribe now.

டிஸ்னியின் வெளிவரவிருக்கும் அறிவியல் புனைக்கதை திரைப்படமான ’டிரான்: ஏரஸ்’ இந்த வாரம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், ‘சரியான நேரத்தில் வெளி வருவதாக’ முன்னணி நடிகர் ஜாரெட் லெட்டோ தெரிவித்துள்ளார்.

லண்டன் திரையிடலின் போது, டிஜிட்டல் ஸ்பை பத்திரிகையிடம் ஜாரெட் கூறுகையில், “செயற்கை தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாக இருக்கும் வேளையில் இந்தப் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும். இந்த படத்தில் நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்யத் தொடங்கினோம். நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராகவோ அல்லது கல்வியாளராகவோ இல்லாதபட்சத்தில் அந்தசமயத்தில் பெரிதாக யாரும் செயற்கை தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசவில்லை. இப்போது ஏஐ தொழில்நுட்பம் பற்றி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எல்லோரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். செயற்கை தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. இப்படியான சமயத்தில் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என்றார்.

ஜாரெட் லெட்டோ, ஜோடே டர்னர்-ஸ்மித், கிரேட்டா லீ, இவான் பீட்டர்ஸ், ஹசன் மின்ஹாஜ் மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் ஆகியோர் நடித்துள்ள ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் அக்டோபர் 10, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.