தேசிய கைத்தறி தினத்தில் “சுய் தாகா- மேட் இன் இந்தியா” படத்துக்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்கும் வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா!
வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி “சுய் தாகா- மேட் இன் இந்தியா” திரைப்படத்திற்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.
இந்த படத்தில் வருண் தவான் தையல்காரராகவும் அனுஷ்கா ஷர்மா ( EMBROIDERER ) தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர். எனவே இப்படத்திற்கான விளம்பரத்தை தொடங்க ஆகஸ்ட் 7 ஆம் தேதியைவிட சிறந்த நாளாக இருக்கப்போவதில்லை .
இத்திரைப்படத்தினை நெசவாளர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் சமர்பிப்பதில் படக்குழு மிக்க மகிழ்ச்சி அடைகிறது. அதனால் இப்படத்தின் விளம்பர வேலையை ஆகஸ்ட் தேசிய கைத்தறி தினத்தன்று தொடங்குகிறோம் என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவித்தது. அதேநாளில் 1905 ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் உள்நாட்டு தொழில்முயற்சியை புதுப்பிப்பதைக் கண்டது.வருண் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இதேநாளில் படத்தின் விளம்பர சுற்றுப்பயணத்தை தொடங்க தயாராக உள்ளனர்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த “சுய் தாகா- மேட் இன் இந்தியா” திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.