OTT யில்”விடுதலை” 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கிய படைப்பாக கொண்டாடப்பட்ட, RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகானாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்த “விடுதலை” திரைப்படம், சமீபத்தில் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியானபோதே, இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 28, 2023, Zee5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் உற்சாகமான வரவேற்பைப் பெற்று, மிக குறுகிய காலகட்டத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது.

Related Posts
1 of 20

தமிழ் திரையுலகின் முத்திரை படைப்புகளை வழங்குவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அந்த வகையில் அவரது சமீபத்திய வெளியீடான ‘விடுதலை பாகம் 1’ சமூக அக்கறை கொண்ட படைப்பாக, அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது.

#ViduthalaiPart1 #விடுதலைபாகம்1