‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக உள்ளன. இந்த நேரத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்.
ரெட் ஜெயண்ட் தமிழ்நாடு முழுவதும் படத்தை விநியோகிக்கவுள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.