ஓ(ட்)டு போட்ட வீடு ஒழுகாது, நழுவாது ஓட்டுப் போடுவோம் ! : பார்த்திபனின் ‘எலெக்‌ஷன்’ கிறுக்கல்

Get real time updates directly on you device, subscribe now.

parthiban

தைச் செய்தாலும் அதில் புதுமையை புகுத்துபவர் நடிகர் பார்த்திபன்!

வருகிற மே 16-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு குடிமகனும் ஓட்டு போடும் அவசியத்தை வலியுறுத்தி ‘கவிதை’தனத்தோடு செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

வழக்கம் போல சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கும் பார்த்திபனின் கவிதை இதோ :

O2 = oxygen

ஓட்டு=பிராணவாயு▶️ஆரோக்கிய மக்களாட்சிக்கு!
உயிருக்கு சுவாசம் போல்…
ஆழ்ந்து (யோசித்து)உள்வாங்கி
(கவனமாய்) நிதானித்து வெளியிடும்
(வாக்குரிமை) நம் இருப்பை
உறுதி செய்யும்!
⬇️ஓ(ட்)டு போட்ட வீடு ஒழுகாது.
நழுவாது ஓட்டுப் போடுவோம் !
100%

⬆️[ஓட்டுப்◀️போட்ட வீடு என்றிருக்க வேண்டும்.
‘ ப் ‘ போடாமல் விடுவது சந்திப் பிழை மட்டுமே
ஓட்டே போடாமல் விடுவது சந்ததிப் பிழையாகிவிடும்]

Getting note&
Putting vote is
nothing but a
Cheapest form of
PROSTITUTION
Selling yourselves
Selling your souls
—————–
இப்படிக்கு,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
(திரைக்கலைஞனை மீறி
விலை போகாத
இந்தியக் குடிமகன் !)