காவேரி உரிமைக்காக அரைநாள் போராட்டம்! – நடிகர் சங்கம் செய்வது சரியா?

Get real time updates directly on you device, subscribe now.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் பலவித போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதே போல தென்னிந்திய நடிகர் சங்கமும் வரும் 8 – ஆம் தேதி அறப்போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

நேற்று இந்த அறிவிப்பு வெளியான உடனேயே சமூகவலைத்தளங்களில் நடிகர் சங்கத்தின் அறப்போராட்டம் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து கருத்துகளை போட ஆரம்பித்து விட்டனர்.

Related Posts
1 of 96

அதற்கு முக்கிய காரணம் போராட்டம் நடைபெறும் கால அளவு தான். இந்த அறவழிப் போராட்டத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. அதனால் தான் நெட்டிஷன்கள் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சைக்கு ஒரு முழு நாள் போராடாமல் அரை நாள் மட்டும் தான் போராடுவதா? என்ற கொந்தளித்து விட்டார்கள்.

ஆனால் ‘நடிகர் சங்கத்தின் கண்டன அறவழி போராட்டம் நடத்த 8.4.18 ஞாயிறு அன்று காலை 9மணி முதல் 6 மணி வரை காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை தான் போலீஸ் அனுமதி கொடுத்தது என்று விளக்கம் கொடுத்துள்ளது.